அண்மைக்காலமாக அதிகமான இணையவழி திருட்டு சம்பவங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிலருடைய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து நிதி உதவி கோரிய செய்திகளை அனுப்பி குறித்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது.
இவ்வகையான உதவி கோரல் செய்திகள் திருகோணமலையின் பிரபலமான நபர் ஒருவரிடமிருந்தம் எனக்கு கிடைக்கப்பெற்றிருந்தது எனினும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டேன் இருப்பினும் இருவர் அவருடைய கோரிக்கைக்கு அமைய பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறு இருக்க நேற்றைய தினம் வட்ஸ்அப் மூலமாக 0764806640 என்ற இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்தில் உரையாடிய குறித்த நபர் குழு உரையாடலுக்காக தொலைபேசிக்கு வந்த OTP இலக்கத்தை வழங்குமாறு அவசரமாக கோரி இருந்தார்.
அப்படி எதுவும் வரவில்லை என கூறவே அப்போதுதான் வருகிறது. இதில் ஏதோ சிக்கல் இருப்பதாக உணர்ந்து கால தாமதம் செய்யவே அவர் அழைப்பை துண்டித்துவிட்டு ஓடிவிட்டார்.
களவெடுக்க தெரிந்தவனுக்கு அதை யாரிடம் எடுக்கலாம் என்று தெரியவில்லையே (நல்ல காலம் வங்கிக் கணக்கை பார்க்கவில்லை)
இதுபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இந்துக்கல்லூரியின் அதிபருக்கு நடந்ததாகவும் பின்னர் அவர் வங்கியை நோக்கி பயணித்ததாகவும் தெரிய வருகின்றது.
OTP இலக்கம் இருந்தாலே வங்கியில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. எனவே அவதானமாக இருங்கள்.

