திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா..?
இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி?
திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா?
இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி?
என மக்கள் கேள்வியெழுப்பியிள்ளனர்.
ஏனெனில் இந்த வருடம் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கில் அதிகளவான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை
இதனால் மக்கள் மத்தியில் ஏமாற்றமும், மனக்கவலையும், பல்வேறு சந்தேகங்களும் அதிகரித்துள்ளதுடன் ஊழல்கள் இடம் பெறுகிறது என்றும் வடமராட்சி கிழக்கு மக்கள் சந்தேகிக்கின்ற இதே வேளை வடமராட்சி கிழக்கின் கிராமங்கள் சில போதைப் பொருள் கடத்தல் கிராமம் என சித்தரிக்கப்படுகிறது எனவும் மக்கள் தமது கவலையினை வெளிப்படுத்துகின்றனர்.
இவர்களது சந்தேகத்திற்கு நியாயமான காரணம் உண்டு,
கடந்த திங்கட்கிழமை செம்பியன்பற்று தெற்கு பகுதியிலும், மாமுனைப் பகுதியிலும் அதிகளவான கேரள கஞ்சா கடப்படை மற்றும் மருதங்கேணி பொலிஸால் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இது பல்வேறு இடங்களிலும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இது விடயத்தில் நடவடிக்கை ஏடுக்கக்கூடிய அதிகாரிகள் தரப்புக்கள் விரைந்து உரிய நடவடிக்கை ஏடுக்கவேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

