மத்திய கலாசார நிதியத்தின் முறைகேடுகள்: மூவர் கொண்ட குழு நியமனம்

மத்திய கலாசார நிதியத்தின் முறைகேடுகள்: மூவர் கொண்ட குழு நியமனம்

2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மத ஸ்தலங்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்காக மத்திய கலாசார நிதியத்தினால் (CCF) வழங்கப்பட்ட நிதியுதவிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜீ.எம்.டபிள்யூ. பிரதீப் ஜயதிலக்கவின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும்.

Recommended For You

About the Author: admin