பிக்கு ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவேளை பிடிபட்டார்.

கடந்த 06.07.2023ல் பிக்கு ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவேளை பிடிபட்டார்.

அப்போது அவர்கூட இருந்த பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து பொதுவெளியில் சிலர் பரப்பினர்.

விபச்சார பெண் ஒருவரை ஊர் மக்கள் நிர்வாணப்படுத்தி தண்டித்தபோது அதனைக் கண்ட புத்த பெருமான் அப் பெண்ணிற்கு முதலில் ஆடைகளை வழங்குங்கள் என்றாராம்.

புத்த பெருமானின் இந்த வரிகளைக் குறிப்பிட்டு இன்னொரு பிக்கு அப்போது கண்டனம் தெரிவித்தார்.

உண்மைதான். ஒரு பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து அதனை பரப்புவது தவறுதான்.

ஆனால் சிங்கள ராணுவம் முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்களின் ஆடைகளை உரிந்து நிர்வாணப்படுத்திய போது ஏன் இந்த நியாயத்தை இந்த பிக்கு கேட்கவில்லை?

அந்த போட்டோக்களை பொது வெளியில் பகிர்ந்து பாற்சோறு பொங்கி சாப்பிட்டபோது ஏன் இதனை தவறு என்று இந்த பிக்கு சுட்டிக்காட்டவில்லை?

தமது பிக்கு ஒருவருக்கு நிகழும்போதுதான் புத்தர் பெருமான் கூறியதெல்லாம் இந்த பிக்குவிற்கு நினைவுக்கு வந்ததா?

இப்பகூட செம்மணியில் கொல்லப்பட்டவர்கள் ஆடையின்றி நிர்வாணமாக்கப்பட்டே புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதையாவது இந்த பிக்கு கண்டிப்பாரா? அல்லது,

தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி கொல்வது, அதனை போட்டோ பிடித்து பரப்புவது தவறு இல்லை என்று புத்தர் பெருமான் கூறியிருக்கிறாரா?

Recommended For You

About the Author: admin