கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதானவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் வியாபார விளம்பரங்களை சந்தைப்படுத்த எம்மை தொடர்பு கொள்ளவும்…

Recommended For You

About the Author: admin