தடுப்புக்காவலில் 79 சந்தேகநபர்கள் உயிரிழப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில் அல்லது கைது செய்யப்படும்போது 79 சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் ஆணையாளரும் சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா கூறுகையில், 49 சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் கைது செய்யப்படும் செயல்முறையின் போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக, கைது செய்யப்படும் போதும், கைது செய்யப்பட்ட பின்னரும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பதில் பொலிஸ் மா அதிபர் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளதாகவும் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

