மட்டக்களப்பு 37ஆம் கிராமம் கூழாவடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்..!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழாவின் கொடியேற்றம் இன்று (23-06-2025)ஆம் திகதி இடம்பெற்றன.
இதன் போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம் பெற்று கொடிச்சீலை நாககன்னி ஆலயத்தில் இருந்து வீதி வலமாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் உள் வீதி வலம் வந்து கொடியேற்றம் இடம் பெற்று தம்ப அபிஷேகம் இடம் பெற்றன.
திருவிழா பத்து நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் (02-07-2025)ஆம் திகதியன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.


