அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து..!

அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து..!

இன்றையதினம்ஜஅராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த உழவியந்திரமானது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளை, வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து உழவு இயந்திரத்தின் மீது விழுந்திருந்தாலும் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

விபத்தின்போது சேதம் ஏற்பட்ட மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin