தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் (20.06.2025) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கெளரவ கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் , அதிபர்கள், ஆசிரியர்கள் ,அரச அதிகாரிகள் ,மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.


