முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..!
முல்லைத்தீவு , வண்ணங்குளம் ஜிஎன் பிரிவில் புதர்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியுள்ள இடம் பனைமரங்களுக்கு அருகிலுள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையை பொறுத்து, தீ பனைமரங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குத் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது.
எனவே, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தீ உங்கள் வீட்டிற்கு அருகில் வந்தால், உடனடியாக அவதானித்து, பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
தகவல் – முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு


