இந்தியாவில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை

தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது.

இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 1,560 ரூபா உயர்வடைந்தததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பொருளாதார நிலைமை, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அத்துடன் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயற்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதேவேளை, தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றமும் காரணமாகும்.

Recommended For You

About the Author: admin