யாழ் கடற்கரைகளில் கரையொதுங்கும் பயங்கர பொருள்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருளானது (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் இது அடையாளம் காணப்பட்டு அடுத்த நடவடிக்கையாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்படி அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை விளைவிக்கக்கூடியது.

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப்பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும் என்பதனை அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin