பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்து பதம் பார்த்தவருக்கு காத்திருந்த சம்பவம்!

மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை பிடித்துக் கடித்து காயப்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவமானது கேகாலை – ரண்வல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.

கேகாலை – ஹெட்டிமுல்ல 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பொலிஸ் உத்தரவையும் மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கடித்து காயப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin