தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த அவர் நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான சபு , மூன்று முறை உலக “ஹெவிவெயிட்” சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியிருக்கிறார்.
1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த வீரராக அறிமுகமான இவர் இந்த வருடம் தனது ஓய்வை அறிவித்தார்.

