பழுதடைந்த முட்டை விற்பனை: சுற்றி வளைத்த சுகாதார பரிசோதகர்கள்

வவுனியாவில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை: சுற்றி வளைத்த சுகாதார பரிசோதகர்கள்

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை நேற்று (30.04) மாலை மேற்கொண்டனர்.

இதன்போது பொது சகாதார பரிசோதகர்களால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இயங்கி வரும் முட்டை விற்பனை நிலையத்தில் இருந்து பாடசாலை மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் பழுதைடைந்த நிலையில் கணப்பட்டதாக வவுனியா பொது சுகாதர பரிசோதகர்களுக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளையடுத்து குறித்த வர்த்தக நிலையம் மீது சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது பாவனைக்கு உதவாத முறையில் முட்டை விற்னை செய்ததாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அதிகளவலான முட்டைகளும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

Recommended For You

About the Author: admin