
சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார்.
8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் அந்த பாடசாலையில் நேற்று முன்தினம் திடீரென தீபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீவிபத்தில் காயமடைந்த மார்க் சங்கர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகனைப் பார்ப்பதற்காக தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துவிட்டு பவன் கல்யாண் சிங்கப்பூர் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.