
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கு மிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(05) சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில்,
இவ்வாறான விதிப்பின் போது நாடென்ற ரீதியில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மேலும்,இந்த விடயத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியமான நிவாரணங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விரைவில் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டது.