ட்ரம்பின் வரிவிதிப்பினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

டொனால்ட் ட்ரம்ப்பின்  வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த வகையில், சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 7.27 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3.83 அமெரிக்க டொலராகக் காணப்படுகின்றது

Recommended For You

About the Author: ROHINI ROHINI