தியாக தீபம் நினைவாக தேசியம் பத்திரிகை வெளியீடு

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகி திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிகை நான்கு பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளதுடன் தியாக தீபம் திலீபனின் முழு வரலாறும், தியாகி திலீபனின் அகிம்சை வழியிலான உண்ணா நோன்பின் பன்னிரண்டு தினங்களிலும் நடந்த சம்பவங்களும் குறித்த பத்திரிகையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நோக்குடன் 1000 பத்திரிகைப் பிரதிகள் அச்சிடப்பட்டு நல்லூரில் நேற்று இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டதுடன் ஏனைய பிரதிகளை மாணவர்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் எதிர்வரும் காலங்களில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்த் தேசியத்தின் வரலாறுகளையும், தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி ‘தேசியம்’ பத்திரிகையை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: webeditor