சம்மாந்துறையில் சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் உணவு தயாரிப்பு

5 உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீனின் நெறிப்படுத்தலில் (25) செவ்வாய்க்கிழமை பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

சோதனையின் பின்னர் இனங்காணப்பட்ட 5 உணவகங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கான விடயங்களை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin