
மாடுகள் கடத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் 18 மாடுகள் யாழ்ப்பாணத்திருந்து வவுனியாவிற்கு கடத்திக்கொண்டு சென்ற போது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குள் சாவகச்சேரி பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
பாரவூர்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பசுக்கள் கன்றுகள் அடங்கலாக 18 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடப்படையில் சோதனையிட்ட போது சிக்கியது ஆகும்.
வடக்கிலிருந்து கடந்த பல வருடங்களாக வவுனியா மற்றும் அநுராதபுரம் நோக்கி மாடுகள் மட்டுமன்றி எருமை மாடுகளும் கடத்தப்பட்டு வருகின்றது.
இதன் பின்னணியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில்; தெர்டர்ந்து பாராளுமன்றத்தில் வெற்றி பெற்று வரும் பெரும் வர்த்தகர் இருப்பது பெரும்பாலானவர்கள் அறிந்த விடயமாகும்.
வவுனியா மாவட்டத்தில் மாடுகள் உட்பட பல வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதியே இதன் பினனணியில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் எந்த அரசாங்கம் அதிகாரத்தில் வந்தாலும் பலம் மிக்க அரசியல்வாதியாக அவர் இருப்பதால் சட்டமும் சமூகமும் அமைதியாகவே இருந்து வந்தது.
யாழ்ப்பாணம் மட்டுமன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா வடக்கு மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து அவர் மாடுகளை கடத்தி வருகின்றார்.
விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போரையும் அத்துடன் கிராமங்களில் ஓரிண்டு மாடுகள் வளர்ப்போரையும் இலக்கு வைக்கும் இவ் வர்த்தக அரசியல்வாதி, முகவர்கள் ஊடாக மாடுகளை அதாவது பசுக்கள் மற்றும் கன்றுகளை மக்களின் வறுமையைப்பயன்படுத்தி குறைந்த விலையில் கொள்வனவு செய்கின்றார்.
பின்னர் அவ்வாறு கொள்வனவு செய்த எருமை மாடுகள் அடங்கலாக மாடுகளை ஒரே இரவில் பொலிஸாருடன் பேரம் பேசி கடத்துவதே அவர்களின் வழமையான பாணி.
ஆட்சி மாற்றத்தின் விளைவாக தற்போது அவர்களின் கடத்தும் பொறிமுறையில் மாற்றம் செய்து இப்போது கடத்துகின்றார்கள்.
மாடுகள் ஆடுகளை ஓரித்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதாயின் மாட்டின் உரிமையாளர்களின் அனுமதியோடு கிராமசேவை அலுவர் ஊடாக பிரதேச செயலாளர் வரை அனுமதி பெற வேண்டும்
வாகன இலக்கம் ஏற்றும் நேரகாலம் மாடுகளை அடையாளப்படுத்தும் பொறிமுறை மாடுகளின் எண்ணிக்கை இப்படி பல விடயங்களை பெற்றால் மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.
ஆனால் வன்னி தேர்தல் மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க பிரபல வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வந்தர் அவரது செல்வாக்கைப்பயன்படுத்தி இவ்வாறு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றி இறைச்சி விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடத்தப்படும் போது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றத்தை ஒப்புக்கொண்டு செல்வதற்கு தேவையான ஆட்பலம் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றது.
ஒருபோதும் அவர் மீது மாடுகள் கடத்துவது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முடியாது. கிளீன் சிறிலங்கா நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.