எம்.பி.க்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்!

எம்.பி.க்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

உரிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளை பரிசீலித்து தேவையானால் மாத்திரம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், பாதுகாப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கும் பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin