வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்!

வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்!

சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி வரி 300 வீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளமையினால் புதிய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான இறக்குமதி வரிகள் காரணமாக வேகனார் என்ற சிறிய ரக காரின் விலை 70 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.

இந்த இறக்குமதி வரிகள் காரணமாக சந்தையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றின் விலை டேவிட் பீரிஸ் நிறுவனத்தித்தின் தகவல்களுக்கு அமைவாக சுமார் 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், சந்தையில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளின் விலைகளும் அசாதாரணமாக அதிகரித்துள்ளன.

இந்த வாகன விலைகளின்படி இன்று ஒரு சாதாரண மனிதனால் வாகனம் வாங்கி செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், சந்தையின் விலை நிலவரங்களை கண்காணித்து வாகன இறக்குமதி வரிகளை குறைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கியும் இதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin