சஞ்சீவ கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது.. (Audio)

புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப் பதிவுகள் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகளுக்கு உதவியாக இருந்த தலைமறைவான பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் நீதிமன்ற கடமைகளை செய்பவர்.

தலைமறைவான சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடியது தெரியவந்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI