
இலங்கை குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரசு நிறுவனம் பல புகார்களை அளித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான அமெரிக்க அரசு நிறுவனமான NCMEC நிறுவனம் இது தொடர்பான புகார்களை அளித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கை குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறி அமெரிக்க அரசு நிறுவனம் அளித்த 2 புகார்கள் குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் சமந்தி கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த புகார்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.