வாகனம் தரிப்பிடத்தில் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்

பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது.

வாகனத்தை நிறுத்தியதும் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் கட்டணம் இலவசம் என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒரு வாகனம் நிறுத்தப்பட்டதும் கட்டணம் வசூலிக்க எந்த சட்டமும் இல்லை. வாகனம் தரிப்பிடத்தில் இருக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு கட்டணம் இலவசம்.

வாகனம் நிறுத்தப்படும் நேரத்தை உள்ளிட்டு டிக்கெட் வழங்கலாம். நபர் ஒருவர் பத்து நிமிடங்களுக்கு மேல் வாகனத்தை நிறுத்தி இருந்தால், அவர்களிடம் 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் பெறுவது சாத்தியமில்லை.

விசேட விடுமுறை நாட்களிலும் நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை என கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin