இன்றைய ராசிபலன் 11.02.2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். லாபகரமான நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகளும் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். நம்பிக்கையோடு வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற துணிச்சலோடு சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் உங்களுடைய தகுதிக்கு மீறியதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். துடிப்போடு செயல்படக்கூடிய நாள் இந்த நாள். முருகன் அருளால் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு பலப்படும். வருமானம் பெருகும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று முதலில் முருகனை வழிபாடு செய்து விடுங்கள். தேவையில்லாத நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவசர அவசரமாக செயல்படக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற மன கவலைகளை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். முருகனின் அருள் ஆசி கிடைக்கும். மன நிறைவோடு இறைவழிபாட்டை செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளில் நல்ல முன்னேற்றம் காணக்கூடிய நாளாகவும் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். சாதனை படைப்பீர்கள். திறமைசாலிகளாக வலம் வருவீர்கள். பாராட்டும் புகழும் உங்கள் பின்னால் வரும். நேர்மையற்றவர்கள் தானாக உங்களை விட்டு விலகுவார்கள். எதிரி தொல்லை இருக்காது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களை ஒரு வேலையையும் சுதந்திரமாக செய்ய விடமாட்டார்கள். கவலைப்படாதீர்கள் எதிரிகளை அனுசரித்து செல்லுங்கள். முன்கோபடாதீர்கள். முருகனிடம் வேண்டிக்கொண்டு அவன் மேல் எல்லா பாரத்தையும் போடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இன்று உழைப்பு உழைப்பு என்று கூடுதல் உழைப்போடு உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். எப்படியாவது கையில் எடுத்த காரியத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்படுவீர்கள். அதேபோலத்தான் உங்களுக்கான வெற்றியும் இன்று உங்களைத் தேடி வரும். நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். நடக்கவே நடக்காது என்று நினைத்த நல்ல காரியங்கள் கூட தானாக நடந்து விடும். இதெல்லாம் இறைவனின் கருணை என்று நீங்கள் உணர்வீர்கள். தேவையற்ற மனக்கசப்பான சம்பவங்கள் மறக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உங்களை அறியாமலேயே மனதில் ஒரு கஷ்டம் வரும். சேமிப்பு இல்லை, பணம் இல்லை என்ற வருந்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எதிர்கால சேமிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை அனுபவம் இன்று சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். இறையருள் கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சில பல பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. சகோதர சகோதரி உறவுகளில் பலம் கிடைக்க வேண்டும் என்றால், அனுசரித்து செல்ல வேண்டும். ஜாக்கிரதையாக உறவுகளோடு பேசுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். மனதிருப்தியாக இந்த இறை வழிபாடு செய்வீர்கள். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். முருகனைப் பார்த்த சந்தோஷத்திலேயே இந்த நாள் வரும் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். நல்லது நடக்கும்.

Recommended For You

About the Author: admin