ஆயிரக்கணக்கானவர்களின் மரியாதையுடன் லெப்டினன்ட் கொயான் நல்லடக்கம்..!

ஆயிரக்கணக்கானவர்களின் மரியாதையுடன் லெப்டினன்ட் கொயான் நல்லடக்கம்..!

அமெரிக்காவின் ‘நேவி சீல்’ பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்த முதலாவது இலங்கை கடற்படை அதிகாரி எனக் கருதப்படும் லெப்டினன்ட் கொயான் சாமிதவின் இறுதிச்சடங்கு நேற்று (30) கம்பஹா, ஒருதொட்ட பிரதேசத்தில் நடைபெற்றது.

 

இலங்கை கடற்படையின் விசேட படகுப் படையணியின் லெப்டினன்ட் ஆக திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த 28 வயதான கொயான் சாமித அண்மையில் காலமானார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெலிசர, கெமுனு கடற்படை முகாமில் தங்கியிருந்த போதே அவர் உயிரிழந்தார்.

இறுதிச்சடங்கின் போது அவர் கல்வி கற்ற கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: admin