கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin