கோஹ்லியின் டெஸ்ட் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய பவுலர்

கோஹ்லியின் டெஸ்ட் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய பவுலர்

ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹிமான்ஷு சங்வான். இதை அடுத்து ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீரராக மாறி இருக்கிறார் அவர்.

இந்திய அணி வீரர்கள் அனைவரும் இனி உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ கூறியதை அடுத்த விராட் கோஹ்லி ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்றார். டெல்லி மாநில அணியில் இடம் பெற்ற அவர் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார். விராட் கோஹ்லி ஆடும் போட்டி என்பதால் அதைப் பார்க்க ரசிகர்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.

முதல் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லிக்கு துடுப்பாட்டம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் நாள் அன்று ரயில்வேஸ் அணி துடுப்பாட்டம் செய்து 241 ஓட்டங்களை எடுத்திருந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து களத்தில் இருந்தது.

இரண்டாம் நாள் அன்று இரண்டாவது விக்கெட் வீழ்ந்தவுடன் நான்காம் வரிசையில் விராட் கோஹ்லி களமிறங்கினார். அவர் 15 பந்துகளை மட்டும் சந்தித்து 6 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹிமான்ஷூ சங்வான் வீசிய இன்ஸ்விங்கரில் விராட் கோலியின் ஆஃப் ஸ்டம்பு பறந்தது. இதை அடுத்து யார் இந்த ஹிமான்ஷு சங்வான்? என பலரும் தேடி வருகின்றனர்.

விராட் கோஹ்லி கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஓட்டங்களை குவிக்கவில்லை என்பதால் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், உள்ளூர் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அதிலும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் அவரது டெஸ்ட் அணி வாய்ப்பு கேள்விக் குறியாக மாறி உள்ளது. அதற்கு ஹிமான்ஷு சங்வான் முக்கிய காரணமாக மாறி இருக்கிறார்.

ஹிமான்ஷு சங்வான் ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வருபவர். டெல்லியை சேர்ந்த அவர் 2019 ஆம் ஆண்டு முதல் முதல் ரயில்வேஸ் அணிக்காக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். 6 ஆண்டுகளாக அவர் விளையாடி வந்தாலும் மிகக் குறைந்த போட்டிகளிலேயே வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

இதுவரை 23 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் ஹிமான்ஷு சங்வான் 40 இன்னிங்ஸ்களில் 77 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 19.92 ஆகும். இது டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பவுலிங் சராசரி. அவரது எக்கனாமி 3.02. அதாவது ஒரு ஓவருக்கு மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 39.4 ஆகும். அவர் வீசும் 40 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார் என்பதையே இது காட்டுகிறது.

இதை தவிர லிஸ்ட் ஏ போட்டிகள் எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் ஹிமான்ஷு சங்வான். உள்ளூர் டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதிக அனுபவம் இல்லாத ஹிமான்ஷு சங்வான் உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான விராட் கோஹ்லியை பவுல்டு அவுட் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விராட் கோஹ்லி ரசிகர்கள் அவரை குறிவைத்து விமர்சித்தும் வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin