அந்நியப் பணத்து அடாவடியை விரட்டுவதற்குச் சைவ உலகம் திரண்டு எழ வேண்டும்

மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள்
விரட்டினாலும் விடமாட்டார்கள்
மீண்டும் வருவார்கள்.

இப்பொழுது வவுனியா மாவட்டம்
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு
மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம் வந்துள்ளார்கள். சைவ உலகமே விழித்தெழு
முன்னாள் போராளிக்கு உதவி செய் என இலங்கை சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

மறவன்புலவு க. சச்சிதானந்தன் அழைக்கிறேன்

மட்டிகளான மதமாற்றிகளைச்
செட்டிகுளத்தில் இருந்து விரட்ட
முட்டி மோதுமாறு
கட்டியம் கூறி அழைக்கிறேன்

வவுனியா மாவட்டம்
செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு
மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம்.

போராட்டத்தில் உடல் செயலிழந்த நிலையில் குடும்பத்துடன் வாழ்கின்ற அன்பர் எனக்கு அனுப்பிய குரல் பதிவு.

இந்தக் குரல் பதிவைக் கேட்ட பின்பும்
சைவ உலகம் கைகட்டி வாய் பொத்துகிறது.

சைவ உலகத்துக்கு முதுகெலும்பு இல்லையா?

சைவக் கழகங்கள் சைவ மன்றங்கள் சைவத் துடிப்புள்ள இளைஞர்கள் சைவச் சேனைகள் ஒன்று கூட வேண்டுமா வேண்டாமா?

2017 2018 ஆம் ஆண்டுகளில் செட்டிகுளப் பிரதேச செயலகத்தில் உள்ள 18 நிலதாரிப் பிரிவுகளுக்கும் சென்று
இத்தகைய கொடூரர்களின் மதவாதிகளின் மதமாற்றிகளின் செயல்பாடுகளைக் குறைத்து நிறுத்தினேன்.

அக் காலத்தில் மீடியா தோட்டத்துக்கும் சென்று அங்கு மதமாற்றிகள் வராது உழைத்த செட்டிகுளத்து இளைஞர்களை நான் எப்பொழுதும் பாராட்டுகிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும் நந்திக்கொடி நாட்டினோம்
தெருவெங்கும் நந்திக்கொடி நாட்டினோம்
குதிக்கால் பிடரியில் ஒட்ட மதமாற்றிகள் ஓடினார்கள்.

மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள்
விரட்டினாலும் விடமாட்டார்கள்
மீண்டும் வருவார்கள்
இப்பொழுது அங்கே வந்துள்ளார்கள்

சைவ உலகமே விழித்தெழு
முன்னாள் போராளிக்கு உதவி செய்.

செட்டிகுளம் செல்க
மீடியா தோட்டம் செல்க
வேண்டா விருந்தாளி
அழையாத அட்டுழியக்காரன்
ஏழைகளை அறிவு குறைந்தவர்களை
ஏமாற்றி
மதமாற்றும் அநியாயக் கும்பல்களை
அந்நியப் பணத்து அடாவடியை விரட்டுவதற்குச்
சைவ உலகம் திரண்டு எழ வேண்டும்.

செட்டிகுளம் செல்க
மட்டிகளான மதமாற்றிகளை விரட்டுக
சைவ சமய நெறியாளர்களைக் காக்க கோயில்களைக் காக்க
அழைக்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor