‘சம்சாரம் அது மின்சாரம்’ பட நடிகை கமலா காலமானார்
நடிகை கமலா காமேஷ் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.
இந்நிலையில் கமலா உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.