பொதுவாக ஆண், பெண் இருபாலரும் கட்டுகோப்பான உடலமைப்பை அமைத்துக் கொள்வதற்காக Gym செல்வார்கள்.
ஆனால் பலரும் உடற்பயிற்சி தொடர்பான போதியளவு தெளிவு இல்லாமல் கடின முயற்சியில் உடம்பின் பருமனை குறைக்க அல்லது கூட்டுவதற்கு முயற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறான விடயம்.
இதனை தொடர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு போன்ற பிரச்சினைகள் உடலில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் Gym செல்வோர் கட்டாயமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்.
Gym செல்வராக இருந்தால் மறக்காம இத செய்ங்க..
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டவராக இருந்தால் Gym செல்லும் முன் ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது அவசியம், ஏனெனில் உடற்பயிற்சி போது உடலிலுள்ள சக்கரையின் அளவை குறையலாம். இவ்வாறு குறைவதனால் மயக்கம், வாந்தி மற்றும் உடற்சோர்வு பிரச்சினைகள் ஏற்படும், அந்நேரத்தில் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.
உடற்பயிற்சியின் போது காயங்கள் ஏற்படும், இதற்கு முறையான வைத்தியரை நாட வேண்டும். இவ்வாறு சிகிச்சையளிக்க தவறும் பட்சத்தில் இரத்த போக்கு அதிகரித்து பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Gymமிற்கு செல்லும் அனைவருக்கும் ஒரு கால எல்லை மற்றும் மணித்தியால வரையறை இருக்கும், அதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்தும்.