யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை…

யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை….

இந்த விடயத்தில் கெழுத்திகள் மீது சட்டம் பாய்வதும் சுறாக்கள் இலகுவாக தப்பிப்பதும் வழமையான விடயம்….

சட்டத்தின் ஓட்டைகளை நன்கு தெரிந்து பெயருக்கு ஓர் அனுமதியை எடுத்துக்கொண்டு கணக்கில்லாமல் நடக்கும் இந்த மோசடியை பலரும் கண்டும் காணாமல் இருக்க சுறாக்களின் பணபலம் முக்கிய காரணம் ( பல ஆண்டுகளாக வடக்கில் இருந்து பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் உட்பட)

அரச பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாட்டை ஆரம்பத்தில் ஆதரித்த சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் குறித்த சுறாவின் ஊடக சந்திப்பின் பின் தலைகீழாக கதைக்கவும் இதுவே காரணம்….

மொத்தத்தில் எமது நிலம் சார்ந்த முக்கிய விடயம் பொதுவெளிக்கு வந்துள்ளது…. முற்றுப்புள்ளியோ அல்லது கட்டுப்பாடோ செய்யவேண்டிய விடயம் இது….

அரச தரப்பே களத்தில் நிக்கும் போது கட்சி அரசியல்களை கடந்து ஆதரவளிப்பதே நல்லது…
யார் குற்றினாலும் அரிசியானால் சரி…

Recommended For You

About the Author: admin