இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை வெளியானது

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளும் ஒரு ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ம் திகதியும் தொடங்குகிறது.
இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும்.

இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி பெப்ரவரி 13ஆம் திகதி பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin