2024ல் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2024ம்ஆண்டில் 312,836 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதில் 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும்,கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு சென்றுள்ளதாகவும் (77,546), 51,550 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (UAE) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin