நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 4.3 பில்லியன் ரூபாய் இற்குமதி வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.