உர மானியம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin