நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.
இது தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந் நாட்டின் சிறந்த நடிகருடன் எங்களது மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை. திரைப் பயணத்தின் பாதையை மாற்றும் படங்களைக் கொடுத்த நடிகருடன் இணைவது கௌரவம்.
மேலும் கதை கூறுவதில் மெஜிக் செய்யம் மடோனுடன் இணைவதும் மகிழ்ச்சி.
இப் படத்தினால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.