யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அதிகாரிகளுடன் அர்ச்சுனா எம்.பி

வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார்

விமர்சன ரீதியான பார்வை……

ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு வழக்கினை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான குண இயல்பு ஆளுமை அனைவரது பார்வையையும் பெற்றது .மாவட்ட ஒருங்இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது

இடத்தில் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னார் இவரைப்போல பல கேள்விகளைக் கேட்கின்ற பொழுது தான் அரசாங்க நிறுவனங்களை சரியாக நெறிப்படுத்த முடியும் எனவே இவ்வாறானவர் தேவை எனவும் கருத்துரைத்தார்.

அத்துடன் சில இடங்களில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்புடைய செயற்பாடுகளை நேரடியாக வைத்தியர்Mp Ramanathan Archchuna விமர்சித்தார்.

அங்கிருந்தவர்கள் பலர் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பான ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் அவரை அவதானித்தவாறும் காணப்பட்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறுகின்ற இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் Mp அர்ச்சுனா என்று உணர்த்திவிட்டார்

அதன் செயற்பாடுகள் அபிவிருத்தி சார்ந்ததாக இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு திணைக்களங்களையும் அதன் செயற்பாடுகளையும் சரியான விதத்தில் இயங்குகின்றதா??? என மேற்பார்வை செய்வது கேள்வி கேட்கின்ற உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை இன்று உணர்த்தினார்

இவ்வளவு காலமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கும் இன்று NPP அரசாங்கம் மற்றும் வைத்தியர் Mp அர்ச்சுனா கூட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணமாகும்

இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தினார்.

எனவே அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் ஒரு வரைவை கொண்டு வருவதற்கு வைத்தியர்Mp அர்ச்சுனா முன்மொழிய அதனை சந்திரசேகர் தலைமையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் என்ன விடயம் சிறப்பானது என்றால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதே அதேபோல் அனைத்து விடயங்களும் இவ்வாறு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எமது பிரதிநிதித்து முன்னேற்ற முடியும் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த விடயம் இவ்வளவு காலமும் ஏன் இடம்பெறவில்லை???
உண்மையிலேயே NPP அரசாங்கம் ஒரு சிறந்த அரசாங்கம் என்பதை இந்த இடத்தில் பொது மக்களாகிய நாங்கள் பார்க்கின்றோம்.

அதேபோல் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கை மருத்துவ ரீதியாக இடம்பெற்ற பிழைகள் ஊழலை உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும் என் இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படுவதற்கு முதலாவது மணி ஆக இதனை அடிக்க வேண்டும்

அத்துடன் ஊழல்வாதிகள் வைத்திய துறையில் இருக்கின்ற ஊழல்வாதிகள் களையப்பட வேண்டும் உண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய மாபியா என்று சொல்லப்படுகின்றது இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் இதற்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்து கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் தற்பொழுது கடமையில் இருக்கின்ற பனிப்பாளர் உரிய தகைமைகள் இன்றி வந்தவர் என்பதையும் சபையில் சுட்டிக்காட்டிய Archchuna Ramanathan என் போஸ்ட் என்று சொல்லப்படுகிற முறையில் மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார்

இதனைத் தெளிவு படுத்தியதன் மூலம் இது ஒரு அரசியல் சார்ந்த நியமனம் என்பதையும் சபையில் ஒரு வகையில் மறைமுகமாக தெரியப்படுத்தினார்.

உண்மையில் ஒவ்வொரு பொதுமகனும் செலுத்துகின்ற வரி பணத்தின் அது பெறுமதியை உணர்ந்தால் போல வைத்திய அர்ச்சுனா அனைத்து திணைக்கள ரீதியான கணக்கு வழக்குகளையும் மிகவும் துல்லியமாக சிறிய நேரங்களில் பார்த்து செலவழித்த பணம் எவ்வளவு செலவழிக்காத பணமும் எவ்வளவு என விழாவாரியாக கேள்விகளை கேட்டார். ஒரு கட்டத்தில் பத்து நாட்களுக்கு இவ்வளவு மில்லியன் பணத்தை நீங்கள் செலவழிப்பீர்களா எனவும் கேட்டார்

அந்த இடத்தில் தான் அனைவரது எதிர்ப்பும் கிளம்பியது என்று கூறலாம் உண்மையில் அரச அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை சரியாக செலவழிக்க வேண்டும் அவசரப்பட்டு திட்டங்களை நிறைவேற்றி வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் வருடம் முடிகின்றது என்று திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றாமல் பூரணமாக செவ்வனே அந்த வேலை இடம்பெறாது என்ற உண்மையாயின் சபையில் போட்டு உடைத்தார்

பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக செலவழித்து 100 நிறைவைக் காட்டுகின்றார்கள் என்பதை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் உணர்த்தினார்

இங்கே அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் செயல்பாடுகள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் பலர் டக்ளஸ் DCC தலைவராக இருந்த காலத்தில் இவ்வாறு கதைத்தால் எம்பி அர்ச்சனாவை பிடித்து வெளியில் விட்டிருப்பார் என்று முன்பு இருந்த அரசாங்க காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லாமை தொடர்பாக கதைத்துக் கொண்டனர்

இருந்த பொழுதிலும் அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான முறையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சரியான விதத்தில் அதன் செயற்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதன் மூலமாக பிழையான விதத்தில் வீண் செலவு செய்யாமல் பணத்தினை உரிய பெறுமதியோடு காத்திரமான செயற்பாடுகளை செய்வதை விரும்புவதாக காணப்பட்டார் என்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது . பல ஊழல்வாதிகளை தூக்கி வாரி போட்டது.

சிறந்த ஒரு முன்மாதிரியான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக கருதலாம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகஸ்தர்கள் அரசு அதிகாரிகள் பலர் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க போகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது

உண்மையில் வேலை செய்யாமல் பணத்தினை பெறுவது இதன் மூலம் தான் நமது நாடு அகல பாதாளத்திற்கு சென்றது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இனி வரும் காலங்களில் எதுவும் சரிவராது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது
இப்படிக்கு ஏழை தமிழ் மகன் நீலன்.

முடிந்தவரை இதனை பகிருங்கள் இதன் மூலம் பல ஊழல்வாதிவாதிகளுக்கு இன்றைய செய்தியானது இறுதி மணியாக ஒலிக்கட்டும்

Recommended For You

About the Author: admin