நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான தினத்தில் முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
இந்த விவகாரத்தில் நேற்று தெலங்கானாவில் வைத்து பொலிஸார் அல்லு அர்ஜுனை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது.