அடுத்த தாழமுக்கம் தயாராகிறது 

அடுத்த தாழமுக்கம் தயாராகிறது

அடுத்த 66 மணித்தியாலத்தில் (15/12/2024) அன்று உருவாகவுள்ள காற்றழுத்தம் 80% வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இது சரியாக முல்லைத்தீவுக்குக் கிழக்காக 1300km தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 1400km தூரத்திலுமுள்ளது. இம்மாதத்தின் இரண்டாவது தாழமுக்கமாக இது அமையும்.

மிக வேகமாகவே குறித்த சுழற்சியானது தாழமுக்கம் ஆவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளது. இதன் நகர்வுத்திசை மேற்கு, வடமேற்காக அமையும். அதாவது இது கரையைச் சேருமிடம் சென்னைக்கும்(மீஞ்சூர்) பாண்டிச்சேரிக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியையே காட்டுகின்றது. சில மாதிரிகள் பாண்டிச்சேரிக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியை அடையாளம் காட்டுகின்றது. 20/12/2024 இரவுக்கு முன்பே கரையைக் கடந்துவிடும் அதே நேரம், இது ஒரு புயலாகவே தமிழகக்கரைகளைச் சேரும் என்பதையே தரவுகள் காட்டுகின்றன என்பதே இங்கு முக்கியமான- முன்னெச்செரிக்கையான விடயமாகும்.

இதன் தாக்கத்தினால் இலங்கையின் வடக்குப்பகுதியில் 16/12/2024 தொடக்கம் 20/12/2024 வரை பின்வரும் அளவான மழைவீழ்ச்சியைப் பெறும் என்று நம்பப்படுகிறது. (16,17,18 கனமழை) இது சிலவேளைகளில் அதிகமாகலாம்.

யாழ்ப்பாணம் 150-200mm

முல்லைத்தீவு, கிளிநொச்சி 100-150mm

வவுனியா, மன்னார், திருகோணமலை 100mm

மேற்குறித்த காலத்தில் தமிழகத்தில் வேதாரண்யம் (கோடியக்கரை) முதல் சென்னை வரையான கிழக்குக் கரையை உள்ளடக்கிய பகுதிகளில் கனமழை பெய்யும். மீண்டும் டெல்டா வலயங்களில் கனமழை பெய்யும். உதகமண்டலத்தில் பெய்யும் மிகக் கனமழையுடன் குறித்த காற்றழுத்தம் நிறைவுறும்.

அடுத்த 60 மணிநேரத்திலிருந்து இலங்கையின் மேற்குக் கடற்பக்கங்களில் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதுடன் இது அடுத்த 72 மணி நேரத்தில் இலங்கையின் கடற்பகுதிகளில் பரவும், எனவே ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதையும், கடற்பகுதிகளுக்குச் செல்வதையும் தவிர்ப்பது நல்லது.

இன்றைய நிலையில் கடந்த நாட்களில் வங்கக் கடலில் ஆரம்பித்த காற்றழுத்தமானது அடுத்த 24 மணிநேரத்திற்குள் செயலிழக்கும், அதே வேளை 14/12/2024 வரை வடக்கில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரையான மழை கிடைக்கும். இத்தருணத்தில் 15/12/2024 அன்று அடுத்த தாழமுக்கத்திற்கான இடைவேளை கிடைக்கும்.

Recommended For You

About the Author: admin