எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்?

எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும்?

-Dr.Arshath Ahamed MBBS, MD, PAED

இந்தக்காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால்

லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது.

Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும்.

விரைவானதும் திட்டமிடப்படாததுமான நகரமயமாக்கல்,

மோசமான சுகாதாரம்,

அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக வளரும் நாடுகளில் கடுமையான காய்ச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான முக்கிய காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் லெப்டோஸ்பைர்களை எடுத்துச் செல்வதால், அவ்வறான இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சுகாதார ஊழியர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள், மீனவர்கள், கொறித்துண்ணிகளினால்( Rodents )கடிபடுபவர்கள், நீரில் விளையாடுபவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர்.

லெப்டோஸ்பைரோசிஸ் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வனவிலங்குகளின் சிறுநீர் வெள்ள நீர், ஆறு, குளம் போன்ற பெரும் நன்னீர் நிலைகளில் கலப்பதால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. இப்படியான அசுத்த நீர் காயங்களில் படுவதால், அந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் அல்லது குடிப்பதால் மனிதர்களை இந்த நோய் தொற்றிக்கொள்கிறது.

குளம், குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல்,

வெள்ளம் பார்க்க செல்வதை தவிர்த்தல், கொதித்து ஆறிய சுத்தமான நீரை பருகுதல்,

கால்களில் காயமுள்ளவர்கள் நீருக்குள் இறங்குவதை தவிர்த்தல்,

விவசாய வேலைகளுக்கு பூட்ஸ் சப்பாத்து அணிதல்,

காலில் உள்ள காயங்களை மூடி பாதுகாத்தல்… போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

அதிக காய்ச்சல்

தலைவலி

உடல் வலி

கண் மஞ்சளாதல்… போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் உசிதமானாது.

அதுபோல உங்கள் பிரதேசங்களில் எலிக் காய்ச்சல் பரவினால் இந்த நோய் உங்களுக்கு ஏற்பாடாமல் இருக்க தடுப்பு மருந்துகளை Prophylaxis பெற்றுக் கொள்ள முடியும்.

எலிக காய்ச்சல் குறித்து தெரிந்துகொள்ள இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை MOH OFFICE மற்றும் வைத்தியசாலைகளை நாட முடியும்.

Recommended For You

About the Author: admin