திக்வெல்லவின் போட்டித் தடை குறித்த அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அவர் தகுதி பெறுகிறார்.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிரேஷன் திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உறுதிப்படுத்தியது.
கடந்த லங்கா பிரீமியர் லீக் சீசனின் போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.