இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்!
இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள்.
அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.)
சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம்.
சுமந்திர ஆதரவாளர்களே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்…
1) சுமந்திரன் மக்களுக்கு நேர்மையாக நடக்காததால் தான் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்.
2) சுமந்தின் கூட்டு முடிவு எடுக்காமல் தனித்து முடிவுகள் எடுத்ததால் தான் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை பெற்றவர். (சம்பந்தன் இருக்கும் வரை மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள். சம்பந்தனின் செயற்பாட்டு அரசியல் இல்லாமல் போன பின் சுமந்திரனின் தனித்த செயற்பாட்டை எதிர்த்தார்கள்)
3) 2020 இல் சிறீதரனின் வீட்டுக்கு சென்று ஆதரவு கேட்டு சிறீதரனின் ஆதரவில் வென்று எம்பியானார். சுமந்திரன் எமக்கு தேவை என்று சொன்ன சிறீதரனுக்கே முதுகில் குத்தினார் சுமந்திரன்.
4) 2020 தேர்தலில் சுமந்திரன் வென்ற பின் தமிழரசின் தலைவராக சிறீதரன் வந்தால் ஆதரவளிப்பேன் என்று ஊடக சந்திப்பில் கூறினார். பின் அதே சிறீதரனுக்கு எதிராக போட்டி போட்டு தோற்றுவிட்டு, வென்ற சிறீதரனுக்கு எதிராக வழக்கு போட்டார்.
5) 2017 இல் ஒரு நேர்காணலில் நல்லாட்சி காலத்தில் உருவாகும் அரசியலமைப்பு தோல்வியுற்றால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன். ராஜநாமா கடிதம் எழுதி பொக்கற்றுக்குள் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் அடித்துவிட்டார். அரசியலமைப்பும் இல்லை, சுமந்திரன் சொன்னதை செய்யவுமில்லை.
6) சொந்த கட்சிக்குள் இருப்பவர்களில் தனக்கு இசைவாக செயற்படாதவர்களை மெல்ல மெல்ல வெட்டி வெளியே விட்டார்.
7) சட்டத்துறையில் சுமந்திரன் கெட்டிக்காரன் தான். ஆனால் ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ் மக்களுக்கு பொருத்தமற்றவர். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது.
இப்படி பல குழறுபடிகளை செய்து கட்சியையும் சிதைத்து, மக்களையும் குழப்பிவிட்ட சுமந்திரனை தெரிவு செய்யாதது பிழை என்று பத்தி எழுதும் ஆட்களை பார்க்கும் போது தான் பரிதாபமாக இருக்கிறது.
இந்த முறை யாழில் தமிழரசுக்கட்சிக்கு வாக்கு போடாத பலர் சொன்ன விடயம். வீட்டுக்கு கூட வாக்கு போட்டால் சுமந்திரன் வந்திடுவார் என்பது தான்.
சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமே 17,000 வாக்குகளுக்கு மேல் இருந்தது. அவளவிற்கு சுமந்திரன் மேல் மக்கள் வெறுப்பில் இருந்திருக்கிறார்கள்.
இப்போதும் ஒன்றும் குறையவில்லை. சிறீதரன் தலைவராக வருவதற்கு எதிராக சுமந்திரன் திருகோணமலையில் போட்ட வழக்கு வாபஸ் பெற்று புதிய தலைமையை திரும்ப தெரிவு செய்து தமிழரசுக் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பயணித்தாலே தமிழ் மக்கள் ஓரணியாக தமிழரசின் பின் அணிதிரள்வார்கள்.
தமிழரசுக்கட்சியை பலப்படுத்தி அதில் சுமந்திரனுக்கு வெளிவிகாரத்துறையையும், அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான குழுவின் தலைமை பொறுப்பையும் கொடுத்தால் கூட அதற்கு சிறீதரன் எதிர்க்க மாட்டார் என்பது என் பார்வையில் தெரிகிறது.
இதெல்லாம் விட்டுவிட்டு பாராளுமன்றம் கூட முன்னரே சுமந்திரன் இல்லாதது இழப்பு என்று அனுதாப பத்தி எழுதுவது அழகில்லை