54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஐந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 32 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அடங்குவர்.
இதற்கு மேலதிகமாக இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், நான்கு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஏழு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.