கன்னட நடிகை ஷோபிதா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் கன்னடத்தில் எரடொர்த்லா மூரு, ஏ.டி.எம், ஜெக்பொட் ஆகிய திரைப்படங்களிலும் மீனாட்சி மதுவே, கோகிலே ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து ஐதரபாத்தில் குடியேறினார்.
இவ்வாறிருக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவரது மரணம் தற்கொலையால் நிகழ்ந்ததா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.