துணையை அன்பாக பார்த்துக் கொள்ளும் ராசிகள்

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் வித்தியாசமான குணநலன்கள் உள்ளன.

அந்த வகையில், திருமண பந்தத்தை எடுத்துக்கொண்டால், தம்பதிகள் இறுதி வரை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவர்.

அதன்படி, அன்பும் மரியாதையும் ஒருசேர எந்த ராசியினர் சிறந்த ஜோடியாக இருப்பார் எனப் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினரைப் பொறுத்தவரையில் இவர்கள் துணை மீது அதிக அன்பு கொண்டிருப்பர். உணர்வு ரீதியாக பிணைப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு கோபம் சற்று அதிகம் என்றாலும்கூட அக்கறைக்கு குறைவிருக்காது. உறவை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள்.

ரிஷபம்

காதல் மற்றும் திருமண வாழ்வில் உறவை வலுப்படுத்த மிகுந்த அக்கறையுடன் செயல்படுவார்கள். தங்கள் துணையை அதிகமாக நேசிப்பார்கள். துணையுடன் அதிக நேரத்தை செலவிட எண்ணுவார்கள். மனம் மற்றும் உடல் ரீதியாக நல்ல புரிதலுடன் இருப்பார்கள்.

மகரம்

சிறந்த துணையாக விளங்குவார்கள். துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். கடின உழைப்பு, நேர்மை அதிகமாக இவர்களிடம் உண்டு.

Recommended For You

About the Author: admin