தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும் செயல்படுத்துவதுதான். தற்போதைய ஜனாதிபதி அநுர திஸாநாயக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் அரசாங்கம் , சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அதிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. அங்கு, எங்களின் தற்போதைய திறன் முடிந்த பிறகு, புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நேற்று (நவம்பர் 29) அமாரி கொழும்பு இன்டர்நேஷனல் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.