இன்றைய ராசிபலன் 01.12.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த விடுமுறை நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கப் போகிறது. பெருசாக பிரச்சனை வரும் என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக முடிந்துவிடும். எதிர்பார்த்த அளவுக்கு எந்த சம்பவமும் இன்று இல்லை. மழை நேரம் என்பதால் அமைதியாக வீட்டிலேயே நேரத்தை கழித்து விடுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மழை நேரம் விடுமுறை நாள் என்றாலும், உங்களுக்கான வேலை காத்துக் கொண்டிருக்கும். அந்த கடமைகளை முடிப்பதற்கு சில பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் உற்சாகமான சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து, குடும்ப உறுப்பினர்களிடம் சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிடுவீர்கள். நல்ல ஓய்வு எடுப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். நிறைய நேரம் தூங்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்தவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி நேரத்தை செலவு செய்தது, மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் வரலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சக்சஸ் ஆகாமல் கூட போகலாம். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழை சமயத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். மாமியார் மருமகள் ஒன்று கூடி விடுவீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவின் மூலம் சேமிப்பு கரைய வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் மனது ஆர்வம் காட்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவாக நீங்கள் செய்யும் வேலையின் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனுபவசாலிகளின் நட்பை வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நட்போடு அதிகம் பழக வேண்டாம். உங்களுடைய பர்சனல் விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாள் மழை என்றாலும் கடமையில் ரொம்பவும் சரியாக நடந்து கொள்வீர்கள். நல்ல பெயர் எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல உயர்வு இருக்கும். கூடமானவரை மழை நேரத்தில் வீட்டில் இருப்பது தான் நல்லது. வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நல்ல செய்தி தொலைபேசி மூலம் வந்து சேர வாய்ப்புகள் இருக்கிறது. விடுமுறை நாளாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு கிடைக்காத சூழ்நிலை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வீட்டில் ஓய்வு எடுக்க நிறைய நேரம் கிடைக்கும். கணவன்மார்கள் மனைவிகளுக்கு உதவி செய்யக்கூடிய பாக்கியத்தையும் அடைவீர்கள். சந்தோஷம் இருக்கும். மழை நேரம் என்றால் என்பதால் பிள்ளைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வெளியில் அனுப்ப வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். சம்பளம் வந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. சம்பளம் கொஞ்சம் தாமதமானாலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வந்த சம்பளம் கையில் நிற்காமல் செலவாகவும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். இந்த மழை நேரத்திலும் உங்களுடைய வேலைகள் இரண்டு மடங்காக இருக்கும். நிறைய உழைக்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தோடு சாப்பிடுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வையுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

Recommended For You

About the Author: admin